ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது பிரீபெயிட் சலுகை பலன்களை அதிரடியாக மாற்றி உள்ளது. அதன்படி ஜியோ ஐஎஸ்டி காலிங் மற்றும் சர்வதேச ரோமிங் பிரீபெயிட் சலுகைகளின் பலன்கள் குறைக்கப்பட்டு உள்ளது.
ஜியோ ரூ. 501 ஐஎஸ்டி வவுச்சர், ரூ. 1101 மற்றும் ரூ. 1201 ஐஆர் சலுகை பலன்கள் குறைக்கப்பட்டு இருக்கிறது. புதிய நடவடிக்கை குறித்து ரிலையன்ஸ் ஜியோ சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. எனினும், இந்த மாற்றங்கள் ஜியோ வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு விட்டது.
ரிலையன்ஸ் ஜியோ ரூ. 575, ரூ. 2875 மற்றும் ரூ. 5751 அன்லிமிட்டெட் ஐஆர் சலுகை பலன்களில் மட்டும் எந்த மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை. ஜியோவின் ரூ. 501 ஐஎஸ்டி சலுகையில் 28 நாட்களுக்கு 424.58 ரூபாய் டாக்டைம் வழங்கப்படுகிறது. இது முன்பை விட ரூ. 126.42 குறைவு ஆகும்.
ரூ. 1101 சலுகையில் ரூ. 933.05 டாக்டைம் வழங்கப்படுகிறது. முன்னதாக இதே சலுகையில் ரூ. 1211 டாக்டைம் வழங்கப்பட்டு வந்தது. இதேபோன்று ரூ. 1201 சலுகையில் முந்தைய ரூ. 1321 டாக்டைமிற்கு மாற்றாக தற்சமயம் ரூ. 1017 டாக்டைம் மட்டுமே வழங்கப்படுகிறது.
ஜியோ சார்பில் இதுவரை சலுகை மாற்றம் பற்றி எவ்வித தவலும் வழங்கப்படவில்லை. இதனால் இவை எப்போது மாற்றப்பட்டன என்பது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
You must be logged in to post a comment.