சென்னை: சென்னையையும் அந்தமானின் போர்ட்பிளேயரையும் இணைக்க கூடிய கடலடி- நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் திட்டத்தை (submarine Optical Fibre Cable) பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கும் நாட்டின் பிற பகுதிகளைப் போல மொபைல் போன், லேண்ட் லைன் தொலைபேசி இணைப்புகள் கிடைக்க கடலடி கண்ணாடி இழை கேபிள் திட்டம் தொடங்கப்பட்டது. 2018-ம் ஆண்டு போர்ட்பிளேயரில் பிரதமர் மோடி இத்திட்டத்துக்கு அடிக்கல் நாட்டினார்.
ரூ1,224 கோடியில் கடலுக்கு அடியில் நீர்மூழ்கி கண்ணாடி இழை கேபிள் சுமார் 2,300 கி.மீ தொலைவுக்கு பதிக்கப்பட்டிருக்கிறது. தற்போது இந்த திட்டம் முழுமையடைந்துவிட்டது.
இத்திட்டத்தை பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ்மூலம் தொடங்கி வைக்கிறார். இந்த கண்ணாடி இழை கேபிள் திட்டம் வெற்றிகரமாக செயல்படும் நிலையில் அந்தமானில் அனைத்து துறைகளிலும் மிகப் பெரிய வளர்ச்சி உருவாகும்.
You must be logged in to post a comment.