இந்திய சுதந்திர தினம் குறித்த சுவாரஷ்யமான விஷயங்கள் :
இந்தியா ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்றதைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவில் சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது.மிகுந்த முக்கியத்துவம் வாயந்த இந்த நாளை நினைவுகூறும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் இந்தியப் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றுவார்.
ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினமானது நாடு முழுவதும் கொடி ஏற்றும் விழாக்கள்,அணிவகுப்புகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளுடன் மிகுந்த உற்சாகத்துடனும்,ஆர்வத்துடனும் கொண்டாடப்படுகிறது.ஆனால் இந்த வருடம் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றின் காரணமாக எப்பொழுதும் போன்று கொண்டாட முடியவில்லை.
சுதந்திர தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தைப் பார்ப்போம்.
1757 ஆம் ஆண்டு நடைபெற்ற பிளாசிப்போரில் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனி வெற்றி பெற்று நிர்வாகக் கட்டுப்பாட்டைப் பெற்றதனால் இந்தியாவில் ஆங்கிலேயரின் ஆட்சி துவங்கியது.
மகாத்மா காந்தி அவர்களால் முன்னெடுக்கப்பட்ட “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தின் தொடர்ச்சியாக ஆங்கில அரசு ஜூன் 1948 க்குள்ளாக அனைத்து அதிகாரங்களையும் இந்தியர்களுக்கு மாற்றுவதாக 1947 ஆம் ஆண்டு அறிவித்தது.
இந்தியாவின் கடைசி வைசிராயான மவுண்ட்பேட்டன் ஆகஸ்ட் 15, 1947 ஐ அதிகாரப் பரிமாற்ற தேதியாக அறிவித்தார்.
ஏன் ஆகஸ்ட் 15 முடிவு ?
ஆகஸ்ட் 15ம் நாளை மவுண்ட்பேட்டன் தனது சிறப்பு நாளாக கருதினார்.ஏனெனில் ஆகஸ்ட் 15 1945 அன்று தான் இரண்டாம் உலகப்போரில் ஜப்பானிய இராணுவம் அவர் முன் சரணடைந்தது.
ஆகஸ்ட் 15 தினமானது, ஆங்கில அரசு ஆட்சி செய்த இந்தியாவானது முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான வன்முறை காரணமாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளாக பிரிக்கப்பட்டதையும் குறிக்கிறது.
டெல்லியில் உள்ள செங்கோட்டையில் ஆகஸ்ட் 15, 1947 அன்று, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு தேசியக்கொடியை ஏற்றினார்.இக்கொண்டாட்டத்தில் இந்திய சுதந்திரத்திற்கு முக்கிய காரணமான மகாத்மா காந்தி அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
மகாத்மா காந்தி ஏன் கலந்து கொள்ளவில்லை ?
நாட்டில் நடைபெற்ற மத வன்முறையின் காரணமாக,அன்றைய தினம் மகாத்மா காந்தி அவர்கள் கல்கத்தாவில் உண்ணாவிரதம் இருந்தார்.
ஆகஸ்ட் 15 ஆம் நாளை இந்தியா தவிர காங்கோ குடியரசு,பக்ரைன் மற்றும் தென்கொரியா போன்ற நாடுகளும் சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.
தாய்நாட்டை விடுவிப்பதற்காக சுதந்திர போராட்ட வீரர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் குடிமக்கள் செய்த தியாகங்களை நினைவு கூர்ந்து இந்த ஆண்டு இந்தியா தனது 74 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.
You must be logged in to post a comment.