தேனியில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் குறித்து ஆலோசனை கூட்டம் வடக்கு மாவட்ட செயலாளர் உமையராஜன் தலைமையில் நடந்தது.
தெற்கு மாவட்ட செயலாளர் செல்வம், செயற்குழு உறுப்பினர் மொக்கராஜ் முன்னிலை வகித்தனர். நகர, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநில பொதுச்செயலாளர் முருகானந்தம் இணைய வழியில் ஆலோசனை வழங்கினார்.
நாளை ( ஆக.9) சஷ்டி தினத்தில் அனைத்து வீடுகள் முன் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்வது, ஆக. 22ல் விநாயகர் சதுர்த்தி விழாவை அரசின் விதிமுறைப்படி சமூக இடைவெளியுடன் ஊர்வலம் இன்றி அந்தந்தப்பகுதியில் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
You must be logged in to post a comment.