கொரோனா ஊரடங்கால் களையிழந்த ஆடிப்பெருக்கு விழா - காவிரி ஆற்றுப்பகுதி, மக்களின்றி வெறிச்சோடியது

கரூர், கரூர் மாவட்டத்தில் ஆடி 18-ந் தேதியான ஆடிப்பெருக்கு அன்று வாங்கல், நெரூர், உள்ளிட்ட காவிரி ஆற்று பகுதிக்கு மக்கள் குடும்பத்துடன் சென்று புனித நீராடுவார்கள். பின்னர் மணலில் பிள்ளையார் பிடித்து, வாழை இலையில் வெற்றிலை, பாக்கு, வாழைப் பழம்,தேங்காய், பூக்கள் ஆகிய வற்றை வைத்து பூஜைகள் செய்வார்கள். புதுமண தம்பதிகள் திருமணத்தின் போது அணிந்த மாலைகளை ஆற்று தண்ணீரில் விட்டு வழிபடுவார்கள்.

பெண்கள் புதிய மஞ்சள் கயிறு மாற்றிக்கொள்வார்கள். இதனால் ஆடிப்பெருக்கு அன்று காவிரி ஆற்றின் கரைகளில் கூட்டம் நிரம்பி வழியும். ஆனால் இந்த ஆண்டு கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால் ஆடிப்பெருக்கான நேற்று நீர்நிலை பகுதிகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டது.

இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே ஆடிப்பெருக்கு வழிபாடு செய்தனர். காவிரி ஆற்றுப்பகுதி பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் ஆடிப்பெருக்கு விழா களையிழந்தது. மேலும் வாங்கல், நெரூர் பகுதிகளில் காவிரி ஆற்றுக்கு செல்லும் சாலை களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, அந்த வழியாக ஆற்றுக்கு வந்த சிலரையும் திருப்பி அனுப்பினர்.அரவக்குறிச்சியில் இருந்து திண்டுக்கல் செல்லும் வழியில் ரங்கமலையின் உச்சியில் உள்ள மிகப்பழமை வாய்ந்த மல்லீஸ்வரர் கோவிலுக்கு ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கு திருநாளில் ஏராளமானவர்கள் வந்து செல்வார்கள்.

மலை அடிவாரத்தில் உள்ள விநாயகர் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, மலை அடிவாரத்தில் இருந்து ஏறி சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் மலையில் நடந்து சென்று மல்லீஸ் வரரை தரிசிப் பார்கள். அங்கிருந்து 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து மலை உச்சிக்கு சென்று கம்பத்து முனியப் பன் சாமியை தரிசனம் செய் வார்கள்.ஆனால் தடையின் காரணமாக நேற்று மல்லீஸ் வரர் கோவி லுக்கு செல்லும் பாதை, மலை அடிவா ரத்தில் நுழைவு வாயில் அடைக்கப் பட்டி ருந்தது.

இதனால் கோவி லுக்கு பக்தர்கள் வராததால் அப்பகுதி வெறிச் சோடியது.குளித் தலை கடம் பவனே சுவரர் கோவிலின் எதிரே உள்ள கடம்பந் துறை காவிரி ஆற்றில் ஆடிப் பெருக்கு அன்று திரளான பெண்கள், புதுமண தம்பதிகள், பொதுமக்கள் புனித நீராடி பின்னர் பூஜைகள் நடத்தி மணலால் செய்யப்பட்ட விநாயகர், சுவாமிக்கு படைக்கப்பட்ட பொருட் களை இலையில் வைத்து ஆரத்தி எடுத்து காவிரி ஆற்றில் விட்டு வழிபடுவார்கள்.ஆனால் நேற்று கடம்பந் துறை காவிரி ஆற்றில் குளிக்கவும், வழிபாடு நடத்தவும் பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் அப்பகுதி வெறிச்சோடியது. காவிரி ஆற்றுக்கு செல்லும் வழியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப் பட்டனர்.

ஆற்றுக்கு குளிக்க வந்தவர்களை குளித்தலை தாசில்தார் முரளிதரன் தலைமையிலான வருவாய்த் துறையினர் தடுத்து திருப்பி அனுப்பினார்கள். சில பெண்கள் அதிகாலை யிலேயே காவிரி ஆற்றுக்கு சென்று சாமி கும்பிட்டுவிட்டு சென்றனர். சில பெண்கள் குளித்தலை வழியாக செல்லும் தென்கரை வாய்க்கால் கரையில் பூஜைகள் செய்து வழிபட்டனர். பலர் தங்கள் வீடுகளிலேயே பூஜைகள் செய்து வழிபட்டனர்ஆடிப்பெருக்கை முன்னிட்டு நொய்யல் அருகே அத்திப்பாளையம் பொன்னாச்சியம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், விபூதி, திருமஞ்சனம், சந்தனம் மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பூக்களால் அலங்கரிக்கப்பட்டு, தீபாரா தனை காட்டப் பட்டது.

இதில், சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசித்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதேபோல் சேமங்கி மாரியம்மன் கோவில் உள்பட பல்வேறு அம்மன் கோவில்களில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.கிருஷ்ணராயபுரம் அருகே மாயனூரில் ஆடிப்பெருக்கு அன்று ஆயிரக்கணக்கானோர் கூடி காவிரி ஆற்றில் புனித நீராடி வழிபாடு நடத்துவார்கள்.

ஆனால் நேற்று மாயனூர் காவிரி ஆற்றுப்பகுதி மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மாயனூர் இன்ஸ்பெக்டர் பிச்சையா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
About Author