ஆண்டிபட்டி ரோட்டரி சங்கங்கள் சார்பில் கொரோனா சிகிச்சைக்கான மருத்துவ உபகரணங்கள் தேனி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டன.
ரோட்டரி மாவட்டம் 3000-தி் தேனி சங்கமம் ரோட்டரி, ஆண்டிபட்டி ரோட்டரி, திருச்சி பெல்சிட்டி ரோட்டரி சங்கங்கள் மற்றும் பன்னாட்டு ரோட்டரி மாவட்டம் 4670 ஆகியவை இணைந்து ரூ. 22 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள உயிர் காக்கும் மருத்துவஉபகரணங்களை மருத்துவக்கல்லுாரி முதல்வர் இளங்கோவனிடம் நன்கொடையாக வழங்கினர்.
நிகழ்ச்சியில் ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் முருகானந்தம், வரும் ஆண்டின் ஆளுநர் ஜெயக்கன், திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் அழகர்சாமி, சங்கர்ராஜ், ஆண்டிபட்டி ரோட்டரி சங்க பொருளாளர் பாண்டியன், முன்னாள் துணை ஆளுநர் பிரேம்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
You must be logged in to post a comment.