தேவதானப்பட்டி அருகே -நல்லகருப்பன்பட்டி மேரிமாதா கல்லுாரியில் ஒரு கிலோ மீட்டர் துாரம் உள்ள ஆண்கள் விடுதியில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டு தனிப் பாதை வழியாக செல்கிறது.
கல்லுாரி வளாகத்தில் முதல்வர், நிர்வாகத்தினர் வசிக்கின்றனர். அலுவலகம் வழக்கம் போல் செயல்படுகிறது. இளங்கலை முதலாமாண்டு மாணவர்கள் சேர்க்கை துவங்கியுள்ளது. இரண்டு, மூன்றாமாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகிறது. மாணவர்கள், பெற்றோர் அச்சமின்றி நேரில் வந்து கல்வி தொடர்பான தகவல், ஆலோசனை பெறலாம் என, முதல்வர் ஐசக், நிதிநிர்வாக அதிகாரி ஜோபி அலெக்ஸ் தெரிவித்தனர்.
You must be logged in to post a comment.