சின்னமனுார்:தேனி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் நான்கு நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்கிறது. இதில் சின்னமனுார் ஒன்றியம் பொட்டிப்புரம், எரணம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களில் மரம் முறிந்து விழுந்ததில் ஏராளமான வீடுகள் சேதமடைந்தன.
டி.புதுக்கோட்டை பொன்னுச்சாமி என்பவரின் பசு பலியானது. முத்தையன்செட்டிபட்டி அரசு கள்ளர் பள்ளி சுற்று சுவர் இடிந்து விழுந்தது.மழை சேதத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் பார்வையிட்டார். தேனி ரவீந்திரநாத்குமார் எம்.பி., கம்பம் ஜக்கையன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் சையதுகான், சின்னமனுார் ஒன்றிய செயலாளர் விமலேஸ்வரன் உடனிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு துணை முதல்வர் நிவாரண உதவி வழங்கினார்.
You must be logged in to post a comment.