தேவாரம் பகுதியில் 4 நாட்களாக தொடர் மழை பெய்கிறது. ஆறு மாதங்களுக்கு பின் வனப்பகுதியில் பெய்த மழையால் காட்டாறு ஓடைகளிலுள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
தேவாரம் சாக்குலுாத்து, வெள்ளை கரடு பகுதியில் வட்டஓடை தடுப்பணை முழு கொள்ளளவை எட்டி மறுகால் பாய்கிறது.டி.ரெங்கநாதபுரம் கன்னிமார்குளம், கோம்பை வாழைக்கோம்பை தடுப்பணைகளும் மறுகால் பாய்கின்றன. அனைத்து காட்டாற்று ஓடைகளிலும் நீர் வரத்திருப்பதால் நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
You must be logged in to post a comment.