அயோத்தி: இந்திய வரலாற்றில் இன்று ஒரு பொன்னான நாள் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அயோத்தியில் ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவிற்குப் பின்னர் நாட்டு மக்களுக்கு மோடி உரையாற்றினார். அப்போது அயோத்தியின் பொருளாதாரத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ராமர் கோயில் ஏற்படுத்தும் என்று புகழாரம் சூட்டினார்.
விழாவில் மோடி பேசுகையில், ''ஆகஸ்ட் 15 போல், ராமர் கோயில் எழுப்ப வேண்டும் என்று போராடி வந்தவர்களுக்கு இன்று ஒரு முக்கியமான நாள். அயோத்தியின் பொருளாதாரத்தில் ராமர் கோயில் முக்கிய பங்கு வகிக்கும். ஆகஸ்ட் 5ஆம் தேதி ஒரு பொன்னாள் ஆகும். ராம ஜென்ம பூமி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.