தென்மேற்கு பருவமழையால் ஆண்டிபட்டி பகுதியில் வெயில் தாக்கம் குறைந்து சாரல், குளிர் காற்று அதிகரித்துள்ளது. காய்ச்சல் பாதிப்பு, சளி, இருமல் தொல்லைக்கு பெரும்பாலானோர் சித்த மருத்துவ முறைகளை பின்பற்றுகின்றனர். ஏற்கனவே கொரோனா பரவும் சூழலில் தற்போதுள்ள பருவநிலை மாற்றம் கூடுதல் பாதிப்பு ஏற்படுத்துகிறது.