நம் உடலில் உள்ள 7 சக்கரங்கள் எவை? இதோ ஓர் முழுமையான விளக்கம்

 நம்உடலில்உள்ள7 சக்கரங்கள்எவை? இதோஓர்முழுமையானவிளக்கம்:

 

சக்கரசமநிலை என்பது ஆவி, உடல் மற்றும் ஆரோக்கியம் ஆகியவற்றுக்கு இடையில் சமநிலையை அடையக்கூடிய செயல் முறையாகும். உடல்முழுவதும்ஒருஇணக்கமானஆற்றல்ஓட்டம்இருப்பதைஇதுஉறுதிசெய்கிறது.

ஒட்டு மொத்த நல்வாழ்வில் கவனம் செலுத்துவதில் இருந்து, நிதானமாகவும், அடித்தளமாகவும் உணர 7 முக்கிய சக்கரங்கள் ஒவ்வொன்றும்

தனித்துவமான முக்கியத்துவம் வாய்ந்தவை. அவை உங்கள் முதுகெலும்பின் முனையிலிருந்து தொடங்கி உங்கள் தலையின் உச்சத்திற்குச் செல்கின்றன.

சக்கரங்கள்என்றால்என்ன?

சக்ரா என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் "சக்கரம்" என்று பொருள்படும் மற்றும் நம் உடலில் ஆற்றல் ஓட்டத்தை குறிக்கிறது. மனித உடலில்

நூற்றுக்கணக்கான சக்கரங்கள் உள்ளன. ஆனால் நாடிகள் சந்திக்கும் மையங்களாக ஏழுசக்கரங்கள் உள்ளன. அவை தான் மனிதனின் சக்தி

நிலைக்கான ஊற்றுக்கண்கள்.

உங்கள் உடலில் இருக்கும் 7 சக்கரங்கள் உண்மையில் ஆற்றல் மையங்கள் ஆகும் இது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துகின்றன. அவற்றின் தோற்றம்

ஆரம்பகால இந்து மதம் மற்றும் புத்தமதங்களில் காணலாம் மற்றும் அவை இரண்டும் சக்கரங்களின் மாறும் தன்மையைப் பற்றி பேசுகிறது.

தியான நடைமுறைகளின் படி, சக்கரங்கள் எப்போதாவது ஒத்திசை வில்லாமல் போனால், அவை உங்கள் உடல்மன மற்றும் ஆன்மீக ஆரோக்கியத்தை

எதிர்மறையாக பாதிக்கும். சக்கரங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட உடல் பகுதி மற்றும் அதன் சரியான செயல்பாட்டுடன் தொடர்புடையது.

சக்கரங்களின்இருப்பிடம்என்ன?

உங்கள் உடலில் இருக்கும் 7 சக்கரங்களைப் பற்றி விழிப்புடன் இருப்பது முக்கியம், ஏனெனில் அவை உடலில் ஆழமாக வேரூன்றிய ஏதேனும் சிக்கல்கள்

வெளியில்வருவதற்கு முன்பு கண்டறிய உதவும். சக்கரங்களைக் கண்டறிந்து பகுப்பாய்வு செய்வது, பழைய உணர்ச்சி மற்றும் உடல் காயங்களை குணப்படுத்த

உதவும். நம் உடலில் உள்ள 7 சக்கரங்களின் இருப்பிடம் மற்றும் அவற்றின் செயல்பாடுகள் பற்றிய பார்வை இங்கே:

1.மூலாதாரம்:

மூலாதாரம் என்பது உடலின் முதல் சக்கரம் மற்றும் முதுகெலும்பின் அடிப்பகுதியில் அமைந்துள்ளது. இந்தசக்கரம் தான் உடல் சக்தியின் இருப்பிடம்.

உயிர் வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்திஆகிறதுஉடலில் உயிர் இயக்கத்துக்கு இது மூலகாரணமாக விளங்குவதால்

மூலாதாரம் என்கிற பெயரைப் பெறுகிறதுஉங்கள் மனம், உடல் மற்றும் ஆன்மாவை பூமியுடன் இணைப்பதே இதன் பங்கு.

இந்த சக்கரம் இயற்கையில் பெண்பால் தன்மை கொண்டதாகும் மற்றும் இதுபூமிக்கு நெருக்கமாக இருப்பது போன்ற உணர்வை நமக்கு தருகிறது.

இந்த சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் உணவு, உறக்கம் ஆகியவற்றிலேயே அதிக நாட்டம் இருக்கும்.

சக்கரத்தின்நிறம்: சிவப்பு

ஸ்வாதிஷ்டானம்:

தொப்புளுக்கு சற்று கீழே அமைந்திருக்கிறது. இந்தசக்கரம் நிணநீர் மண்டலத்துடன் தொடர்புடையது மற்றும் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் பொறுப்பும் கொண்டுள்ளது.இது உங்கள் பாலியல் ஆசைகளுடன் தொடர்பு கொள்ளவும் உதவுகிறது.

ஈகோவிற்கும் இந்த சக்தி தான் காரணமாக இருக்கிறது. மற்றவர்களின் உணர்ச்சிப் போக்குகளை உணர்கின்ற சக்தியும் இந்த சக்கரத்துக்கு உண்டு. ஐம்புலன்களை

தாண்டி அறிகின்ற சக்தி இதிலிருந்து தான் கிடைக்கிறதுஉலகின் பொருள் தன்மை சார்ந்து நுகர்ச்சிகளில் இருக்கிற ஈடுபாட்டிற்குக் காரணமானது.

சக்கரத்தின்நிறம்: ஆரஞ்சு

மணிபூரகம்:

சோலார்ப்ளெக்ஸஸ்என்றும் இதற்கு ஒரு பெயருண்டு. தொப்புளுக்கு சற்றுமேலே இது இருக்கிறது. உடலின்மையமாக இதனை கருதலாம். இந்த

பகுதியில் இருந்து தான் உடல் இயக்கச்சக்தி உடலெங்கும் விநியோகிக்கப்படுகிறது.

இது தன்னம்பிக்கை, சுய ஒழுக்கம் மற்றும் ஞானத்துடன் தொடர்புடையது. கட்டுக்கடங்காத உணர்ச்சியும் இங்கு தான் கருக் கொள்கிறது.

அதனால் தான் அதிர்ச்சியோ பய உணர்ச்சியோஏற்படுகின்ற போது இந்த பகுதியில் உள்ள தசைகள் இருக்கமடைந்து விடுகின்றன. கணையம்,

என்கிற சுரப்பி இதனுடைய கட்டுப்பாட்டில் தான் செயல்படுகிறது. இரைப்பை,கல்லீரல்,பித்தப்பை,மண்ணீரல், ஆகியவை இதன் கட்டுப்பாட்டில் தான்

செயல்படுகின்றன. இந்தசக்கரம் தூண்டப்பட்டவர்கள் கடும் உழைப்பாளிகளாக எறும்பைப் போல் சுறு சுறுப்பானவர்களாக இருப்பார்கள்.

சக்கரத்தின்நிறம்: மஞ்சள்

அனாகதம்:

இதற்குஇருதயச் சக்கரம்என்ற என் கிற பெயரும் உண்டு. மார்பின் மையத்தில், இருதயம் உள்ள பகுதியில் இது இருக்கிறது. அன்பு, பாசம்,

இரக்கம்,சகோதரத்துவம், விசுவாசம், பக்தி, ஆகிய அனைத்து நல்லியல்புகளின் இருப்பிடமும் இதுவே ஆகும்இந்தசக்கரம் உணர்ச்சிரீதியான

சிகிச்சை முறை மற்றும் நல்லமன ஆரோக்கியத்திற்கு காரணமாகும்தைமஸ் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் செயல்படுகிறது. இருதயம்,

நுரையீரல்கள்,இரத்தஓட்டம், கல்லீரல், ஆகியவையும் இதன் ஆதிக்கத்தில் இருக்கின்றன.

சக்கரத்தின்நிறம்: பச்சை

 விசுக்தி:

இதற்குகுரல் வளைச்சக்கரம்என்றொரு பெயரும் உண்டுதொடர்பு கொள்ளுதல், எண்ணங்களை வெளிப்படுத்துதல், படைப்பாற்றல்

ஆகியவை இதன் ஆதிக்கத்திற்கு உட்பட்டவை. நம்முடைய புலன்களுக்கு அப்பால் அறியக் கூடிய விஷயங்களை இதன் மூலமாகத்தான்அறிகிறோம்.

விசுக்தி சக்கரம் தூண்டப்பட்டிருந்தால் விஷத்தன்மை உடலுக்குள் நுழையாமல் தடுக்கமுடியும். விஷம் என்றால் உணவு மட்டுமல்ல. தீய உணர்வுகள்,

எண்ணங்கள், சக்திகள் என்று விஷத் தன்மை கொண்டவற்றிலிருந்து விடுபட முடியும். தைராய்டு சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

குரல்வளை, மூச்சுக்குழல், உணவுக்குழல், கைகள்இதன்கட்டுப்பாட்டில்செயல்படுகின்றன.

சக்கரத்தின்நிறம்: நீலம்

ஆக்னா:

இதைநெற்றிக்கண் சக்கரம்அல்லதுமூன்றாவது கண்சக்கரம்என்றும் சொல்வார்கள். இரண்டு புருவங்களுக்கு மத்தியில் சற்றுமேலாக

அமைந்திருக்கிறது. தொலை உணர்தல், தொலை அறிதல் போன்றசக்திகள் இதன் மூலமாகத்தான் கிடைக்கின்றன. அறிவு சங்கல்பம், மனவலிமை,

ஆகியவற்றின்இருப்பிடம்இதுஇதன் மூலம் தான் விஷயங்களை உருவகப்படுத்திப் பார்க்க முடிகிறது. இந்தக்கண் திறக்கின்ற போது ஆன்மீகக்கண்

திறப்பதாக ஞானிகள் சொல்கிறார்கள்ஆக்னா முழுவது மாகத் தூண்டப்பட்டவர்கள் சமூகத்தில் அங்கீகாரத்தைப் பெற்ற ஞானவான்களாகத்

திகழ்வார்கள்பிட்யூட்டரி சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. தண்டுவடம், மூளையின் கீழ்பகுதி, கண்கள், மூக்குகாதுகள் ஆகிய அவயங்கள்

இதன்கட்டுப்பாட்டுக்குஉட்பட்டவை.

சக்கரத்தின்நிறம்: கருநீலம்

சகஸ்ரஹாரம்:

இதற்குதாமரைச் சக்கரம்என்றபெயரும்உண்டு

இது உச்சந்தலை பகுதியில் அமைந்திருக்கிறது. புத்தமத கருத்தான நிர்வாண நிலையை அடைவது என்பதோடு தொடர்புடைய சக்கரம் ஆகும்,

இந்தச் சக்கரத்தின் மூலம் தான் ஒருவர் ஞானத்தைப் பெறமுடியும்பிரபஞ்சத்துக்கும், நமக்கும் உள்ள தொடர்பினை தெளிவுபடுத்து கின்ற சக்கரம்

இது. என்ன நடக்கப்போகிறது என, அல்லது எதைச் செய்ய வேண்டும் என்று முன் கூட்டியே உணர்கின்ற சக்தி இதிலிருந்து தான் கிடைக்கிறது.

இந்த சக்கரம், பரவச நிலையைத் தரத்தக்கது. எப்போதும் ஒரு விதமானபரவசநிலையிலேயே இருக்கிற தன்மை, சஹஸ்ரஹாரா முழுமையாகத்

தூண்டப்பட்டவர்களுக்கு உரியதுபீனியல் சுரப்பி இதன் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மூளையின் மேல் பகுதி இதன்ஆதிக்கத்துக்கு உட்பட்டது.

இந்த சக்கரத்தை ஒரு மனிதனால் முழுமையாக சமநிலைப் படுத்த முடியாது.

சக்கரத்தின்நிறம்: ஊதா

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
About Author