பாலும் தேனும் : ஒன்றாக சேர்த்து அருந்தலாமா ?
தேன் மற்றும் பால் இரண்டும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன.அவை இரண்டும் அற்புதமான ஆரோக்கிய நன்மைகளுக்கு பெயர் பெற்றவை. தேன் அதன் ஆன்டியாக்சிடென்ட் மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகளுக்கு பெயர் பெற்றது.அதே நேரத்தில் பாலில் புரதம், கால்சியம் மற்றும் லாக்டிக் அமிலம் நிறைந்துள்ளது. அவை இயற்கையின் மிகவும் புனிதமான பொக்கிஷங்கள். இவை இரண்டையும் ஒன்றாக சேர்த்து உட்கொள்ளும்போது அவை சமமாக பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறீர்களா?வாருங்கள் பார்ப்போம்...
ஆரோக்கிய நன்மைகள்:
தேன் மற்றும் பால் இரண்டும் ஒரு உன்னதமான கலவையாகும்.
இது ஒரு அமைதியான தன்மையை மட்டும் ஏற்படுத்துவதோடல்லாமல் மருத்துவ குணங்களும் கொண்டுள்ளதாக ஆராய்ச்சிகள் கூறுகிறது.
தினமும் உங்கள் பாலில் பயன்படுத்தும் வழக்கமான சர்க்கரைக்கு மாற்றாக தேன் மாற்றினால் கிடைக்கும் ஆரோக்கியமான நன்மைகளைக் காண்போம்.
எலும்பு ஆரோக்கியம் :
பாலில் அதிகளவு கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் இது உங்கள் எலும்பினை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.இதில் இரத்த அழுத்த அளவைக் கட்டுப்படுத்த உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்தான பொட்டாசியம் அதிக அளவில் உள்ளது.
நுரையீரல் பாதுகாப்பு :
பாலுடன் தேன் கலந்து குடிப்பது சுவாசப் பிரச்சனைகளைத் தடுக்க ஒரு சிறந்த தீர்வாகும்.இதை சூடான பானமாக அருந்தும்போது சுவாசக் குழாயில் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக் கூடிய பாக்டீரியாக்களைக் கொன்று வெளியேற்றுகிறது.மேலும் தொண்டைப் புண்ணிற்கு சிறந்த மருந்தாகவும் உள்ளது.
வயிற்று தொற்று எதிர்ப்பு:
பால் மற்றும் தேன் சேர்த்து அருந்துவதனால் இதிலுள்ள ஆன்டியாக்சிடென்ட் மற்றும் ஆன்டிமைக்ரோபியல் பண்புகளானது வயிற்றுனுள் நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியாக்களை அழிக்கின்றன.
மேலும் இது நல்ல குடல் பாக்டீரியாக்களையும் மீட்டெடுக்கிறது மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட நோய்களிலிருந்து விரைவாக குணமடைய உதவுகிறது.
தூக்கம் மேம்படும்:
ஏற்கனவே கூறியபடி, தேன் மற்றும் பால் நம் மூளைக்கு ஒரு அமைதியான மற்றும் ஆறுதலான விளைவைக் கொடுக்கிறது. தூங்கச் செல்வதற்கு முன்பு இந்த பானத்தைக் குடிப்பது உங்கள் தூக்கத்தின் தரத்தை மேம்படுத்த உதவும்
பாலும் தேனும் – மக்களிடையே உலவும் கருத்து :
ஒரு சூடான பானத்தில் தேனை கலப்பது பானத்தை நச்சுத்தன்மையடையச் செய்யும் என்று நம்பப்படுகிறது.இருப்பினும், இந்த கருத்தானது முற்றிலும் சரியானதல்ல.தேனை சூடாக்கினால்(>140°C) மட்டுமே பிரச்சனை ஏற்படுகிறது.
முக்கிய குறிப்பு : பாலைச் சூடாக்கி 10 நிமிடங்கள் குளிர வைத்தபின் தேனைச் சேர்த்து அருந்தவேண்டும்.
You must be logged in to post a comment.