சூரியஒளியும் வைட்டமின் D யும் :
ஆய்வறிக்கையின்படி,இந்தியாவில் 70 முதல் 90 சதவீதத்தினர் வைட்டமின் Dகுறைபாடுடையவர்கள்.
வைட்டமின் D ஒரு தனித்துவமான வைட்டமின் ஆகும்.
உங்கள் சருமமானது சூரிய ஒளிக்கு உட்படும்போது சருமத்தில் உள்ள கொழுப்பினால் வைட்டமின் D தயாரிக்கப்படுகிறது. எனவே, உடலில் வைட்டமின் D அளவைப் பராமரிக்க போதுமான சூரிய ஒளியைப் பெறுவது முக்கியம் என்று கூறப்படுகிறது.
இருப்பினும்,அதிகளவு சூரிய ஒளியை பெறும் பட்சத்தில் உடல் பாதிப்பு ஏற்படும் அபாயங்களும் உள்ளன.
உடலில் தேவையான அளவு வைட்டமின் D இருக்கும் பட்சத்தில் உங்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.எனவே இது கோவிட் – 19 போன்ற தற்போதைய தொற்று காலங்களில் மிக முக்கியமானதாகும்.
குறைந்த அளவு வைட்டமின் D உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கிறது மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ், புற்றுநோய், மனச்சோர்வுமற்றும் தசை பலவீனம் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படுவதற்கு காரணமாகவும் உள்ளது.
வைட்டமின் D நிறைந்த உணவுகள் :
குறைந்த அளவு வைட்டமின் D கொண்ட உணவுகள் ஒரு சில மட்டுமே உள்ளன. இந்த பட்டியலில் காட் லிவர் ஆயில் அல்லது மீன் எண்ணெய், வாள்மீன், சால்மன் அல்லது காலா மீன், மாட்டிறைச்சி ஈரல், முட்டையின் மஞ்சள் கரு மற்றும் மத்தி மீன் ஆகியவை அடங்கும்.
உடலில் போதுமான அளவு வைட்டமின் D பெற, இந்த உணவுகளில் சிலவற்றை தினமும் சாப்பிட வேண்டும். உங்கள் உணவு உங்களுக்கு போதுமான வைட்டமின் D வழங்கவில்லை என்றால், வைட்டமின் D சப்ளிமெண்ட்ஸ் எடுத்து, உடலில் தேவையான அளவை பராமரிக்க சிறிது சூரிய ஒளியைப் பெற பரிந்துரைக்கப்படுகிறது.
வைட்டமின் D ஆனது “சூரியஒளி வைட்டமின்” என்று அழைக்கப்படுகிறது. நமது உடலை சூரிய ஒளி பெறும்படி வெளிப்படுத்துவதே வைட்டமின் D பெறுவதற்கான மிகவும் இயற்கையான வழியாகும்.
சூரியனில் இருந்து அதிகபட்ச வைட்டமின் D ஐ நீங்கள் பாதுகாப்பாக பெறுவதற்கு கீழ்க்கண்ட மூன்று விஷயங்களை மேற்கொள்ள வேண்டும்.
சூரிய ஒளியைப் பெற உகந்த நேரம் :
அதிக அளவு வைட்டமின் D பெற வேன்டுமெனில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மிகச்சிறந்த நேரம் ஆகும்.
இந்த நேரத்தில், UVB கதிர்கள் தீவிரமாக உள்ளன, மேலும் இந்த நேரத்தில் வைட்டமின் D தயாரிப்பதில் உடல் மிகவும் திறமையானது என்றும் கூறப்படுகிறது.
மேற்கூறிய நேரமே பாதுகாப்பனதாகவும் மற்ற நேரங்கள் பாதுக்காப்பற்றதாகவும் கருதப்படுகிறது.
அதிக அளவு வைட்டமின் D பெற சூரிய ஒளியில் வெளிப்படுத்தப்பட வேண்டிய உடல் பாகங்கள் :
வைட்டமின் D ஆனது சருமத்தில் உள்ள கொழுப்பிலிருந்து தயாரிக்கப்படுகிறது, இதன் பொருள் ஒருவர் போதுமான அளவு வைட்டமின் D பெற சூரிய ஒளியில் அதிக அளவு சருமத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதாகும்.
அதிக அளவு வைட்டமின் D பெற உங்கள் கைகள், கால்கள், முதுகு மற்றும் அடிவயிற்றை சூரிய ஒளியில் வெளிப்படுத்த வேண்டும். இது உங்கள் உடலை அதிகபட்ச வைட்டமின் D தயாரிக்க அனுமதிக்கும் என்பதால் உங்கள் முதுகை வெளிப்படுத்த மறக்காதீர்கள்.
போதுமான அளவு வைட்டமின் D பெற சூரிய ஒளியில் எவ்வளவு நேரம் செலவிட வேண்டும்?
வைட்டமின் D கவுன்சிலின் கூற்றுப்படி, வெளிர் நிற சருமம் உள்ளவர்களுக்கு சூரிய ஒளி சுமார் 15 நிமிடங்கள் தேவை, அதே நேரத்தில் இருண்ட நிற சருமம் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரம் அல்லது அதற்கு மேற்பட்ட நேரம் தேவைப்படலாம்.
You must be logged in to post a comment.