வேகமாக உடல் எடையைக் குறைப்பது எப்படி?

 

வேகமாக உடல் எடையை குறைப்பது எப்படி ?

அறிவியல் ரீதியிலான மூன்று படி நிலைகள்

 

 

உடல் எடையை வேகமாக குறைப்பதற்கு பல உணவு முறைத் திட்டங்கள் உள்ளன.

அவைகளில் பெரும்பாலான (Diet Plans) உணவு முறைத் திட்டங்கள் பசி மற்றும் திருப்தியற்ற நிலையையே தருகின்றன.

இதன் காரணமாகவே எந்தவொரு உணவுமுறைத் திட்டத்தையும் தொடர்ச்சியாக கடைபிடிக்க முடியாத நிலை ஏற்படுகிறது.

இருப்பினும்,அனைத்து உணவு முறைத் திட்டமும் இந்நிலையைத் தருவதில்லை.

குறைந்த கார்போஹைட்ரேட் உணவு முறைத் திட்டம் உடல் எடையை வேகமாக குறைப்பதிலும் மற்றும் எளிமையாக கடைபிடிக்கும் வண்ணத்திலும் உள்ளது.

இதோ,குறைந்த கார்போஹைட்ரேட் உணவு முறையினைப் பயன்படுத்தி வேகமாக உடல் எடையைக் குறைக்கும் படியான 3 படிநிலைகளைக் காண்போம்.

இந்த மூன்று படிநிலைகளும் மூன்று விதமான நோக்கங்களை உள்ளடக்கியது.அதாவது,

 1. உங்கள் பசியை குறைந்த அளவில் வைத்துக் கொள்ளும்

 2. வேகமாக உடல் எடையைக் குறைக்கும்

 3. உங்கள் உடலின் வளர்சிதை மாற்றம் மற்றும் ஆரோக்கியத்தை ஒரே நேரத்தில் அதிகரிக்கும்

படிநிலை : 1 : கார்போஹைட்ரேட் அளவைக் குறையுங்கள் :

சர்க்கரைகள்மற்றும்மாவுச்சத்துக்கள்அல்லதுகார்போஹைட்ரேட்டுகளைகுறைப்பதே மிகமுக்கியமானபகுதியாகும்.

இவ்வாறு நீங்கள் செய்யும்போது உங்களுடைய பசியின் அளவு குறையும்.நீங்கள் குறைவான கலோரிகளை உண்பீர்கள்.

இதனால் உங்கள் உடலானது ஆற்றலுக்காக கார்போஹைட்ரேட்டை எரிப்பதற்கு பதிலாக ஆற்றலுக்காகசேமிக்கப்பட்டகொழுப்பைஎரிக்கத்தொடங்குகிறது.

கார்போஹைட்ரேட்டின் அளவைக் குறைப்பதின் மற்றொரு நன்மை என்னவென்றால், இது இன்சுலின் அளவைக் குறைக்கிறது, இதனால் சிறுநீரகங்கள் அதிகப்படியான சோடியம் மற்றும் தண்ணீரைக்  வெளியேற்றுகின்றன. இது வீக்கம் மற்றும் தேவையற்ற நீர் எடையைக் குறைக்கிறது.

படிநிலை : 2 : புரதம், கொழுப்புமற்றும்காய்கறிகளைசாப்பிடுங்கள்

உங்கள்  உணவில்ஒவ்வொன்றிலும்புரதச்சத்து,கொழுப்புச் சத்து மற்றும் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் கொண்ட காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பொதுவாக ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வேளை சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

உங்கள் உணவை கீழ்க்காணும் முறையில் எடுத்தீர்கள் என்றால் ஒரு நாளைக்கு 20 – 30 கிராம் அளவில் கார்போஹைட்ரேட் அளவைக் குறைக்க முடியும்.

 

புரத உணவுகள்
குறைந்த அளவு கார்போஹைட்ரேட் கொண்டகாய்கறிகள்
ஆரோக்கியமான கொழுப்புகள்
இறைச்சி
மீன் மற்றும் கடல் உணவுகள்
முட்டை
பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
காலிஃபிளவர்
கீரைகள்
தக்காளி
முட்டைக்கோஸ்
வெள்ளரி
காளான்
தக்காளி
ஆலிவ் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

வெண்ணெய்

கொட்டைகள்

 

படிநிலை : 3 : வாரத்திற்கு மூன்று முறை பளு தூக்கவும்

இந்த உணவுத் திட்டத்தில் உடல் எடையைக் குறைக்க நீங்கள் உடற்பயிற்சி செய்யத் தேவையில்லை.பளு தூக்குவதே அதிகமான பயன்களைத் தரும்.

பளு தூக்குவதின் மூலம் நீங்கள் நிறைய கலோரிகளை எரிப்பீர்கள் மற்றும் உடல் எடை குறைவதினால் ஏற்படும் பக்க விளைவான வளர்சிதை மாற்ற குறைவை சரி செய்ய முடியும்.

பளு தூக்குவதற்கு (lift weights) குறைந்தது வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை உடற்பயிற்சிக் கூடம்(gym) செல்வது நல்லது.

பளு தூக்குவதில்  உங்களுக்கு விருப்பமில்லை எனில், நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் அல்லது நீச்சல் போன்ற சில கார்டியோ உடற்பயிற்சிகளைச்  செய்தால் போதும்.

கார்டியோமற்றும்பளுதூக்குதல்இரண்டும்எடைக் குறைப்பிற்கு உதவும்.

 

    மேற்கூறிய மூன்று படிநிலைகளை கொண்ட இந்த உணவுமுறைத் திட்டத்தைப் பின்பற்றினால் வாரத்திற்கு 2 – 4 கிலோ வரையிலும் எடை குறைய வாய்ப்பு உண்டு.

 எடை குறைப்பு தவிர குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உணவு முறையானது உங்கள் ஆரோக்கியத்தை பல வழிகளில் மேம்படுத்துகிறது.

  • இரத்தச்சர்க்கரைஅளவுகணிசமாகக்குறைகிறது.
  • ட்ரைகிளிசரைடுகள்குறைந்துபோகின்றன.
  • எல்.டி.எல் (மோசமான) கொழுப்புகுறைகிறது .
  • எச்.டி.எல் (நல்ல) கொழுப்புஅதிகரிக்கும்.
  • இரத்தஅழுத்தம்சீர் செய்யப்படுகிறது.

 

 

Enjoyed this article? Stay informed by joining our newsletter!

Comments

You must be logged in to post a comment.

Related Articles
About Author