உங்களது உடல் எந்த வகையைச் சார்ந்தது ? ஆயுர்வேத முறைப்படி 5 நிமிடத்தில் கண்டறியலாம் வாருங்கள்...
ஆயுர்வேத முறைப்படி மனித உடலானது ஐந்து வகைக் கூறுகளால் ஆனது.அதாவது பூமி – 12%,நெருப்பு - 4%,காற்று – 6%, நீர் - 72% ஈதர் - 6%. ஆயுர்வேதமானது இந்த ஐந்து கூறுகளின் இணைகளின் அடிப்படையில் மூன்று தோஷங்களாக நெறிப்படுத்தப்பட்டு
இருக்கிறது. அது வாதம்,பித்தம்,கபம் ஆகும்
தோஷம் |
அடிப்படைக் கூறுகள் |
வாதம் | காற்று + ஈதர் |
பித்தம் | நெருப்பு + நீர் |
கபம் | நீர் + பூமி |
.வாதம்,பித்தம்,கபம் உடலில் சரியான அளவில் நடைபெறுமேயானால் மனிதனுக்கு எந்தவித நோய்களும் இல்லாமல்
உடல் நலத்தோடு வாழவார்கள். மேலும் வாதம்,பித்தம்,கபம் நாடியானது கூடி குறைந்து காணப்படுமேயானால் அதற்கு ஏற்ப மனித உடலில் பல நோய்கள் ஏற்படுகின்றன.
உங்கள் உடலின் வகையை காணலாமா ?
இது வினா மற்றும் விடை அமைப்பில் அமையும். இதில் மொத்தம் 15 வினாக்கள் இடம்பெறும்.10 வினாக்கள் உடல் பண்புகள் குறித்தும் 5 வினாக்கள் மன மற்றும் உணர்வுப் பண்புகள் குறித்ததும் ஆகும்.
ஒவ்வொரு வினாவும் மூன்று பதில்களைக் கொண்டிருக்கும்.நீங்கள் ஏதேனும் ஒரு பதிலைத் தேர்வு செய்ய வேண்டும்.
வினா 1 : உடல் அமைப்பு
A.மெலிந்த,சிறிய,எடை அதிகரிக்காத உடல் அமைப்பு
B.நடுத்தர உடல் அமைப்பு,எளிதில் உடல் எடையை கூட்டவோ அல்லது குறைக்கவோ முடியும்
C.பருமனான உடல் அமைப்பு,எளிதில் உடல் எடையை கூட்டமுடியும் ஆனால் குறைப்பது கடினம்
வினா 2 : நடை மற்றும் பேச்சு
A.வேகமான நடை மற்றும் பேச்சு
B.மிதமான மற்றும் உறுதியான நடை
C.மெதுவான மற்றும் நிதானமான நடை
வினா 3 : காலநிலை விருப்பம்
A.கோடைகாலத்தை விரும்புவது மற்றும் குளிர்காலத்தை வெறுப்பது
B.குளிர்காலத்தை விரும்புவது மற்றும் கோடைகாலத்தை வெறுப்பது
C.வெயில் மற்றும் இலையுதிர் கால நிலையை விரும்புவது மற்றும் ஈரமான காலநிலையை வெறுப்பது
வினா 4 : வியர்வை
A.குறைந்த அளவிலான வியர்வை மற்றும் நாற்றம்
B.அதிக அளவிலான வியர்வை மற்றும் மிதமான நாற்றம்
C.மிதமான அளவிலான வியர்வை,கடின உழைப்பின் போது அதிக வியர்வை மற்றும் அதிக நாற்றம்
வினா 5 : பசி
A.ஒழுங்கற்றது – சில சமயங்களில் அதிக பசி,சில சமயங்களில் பசியின்மை
B.அதிகமானது – எப்பொழுதும் அதிக பசியுடன் இருத்தல்
C.கண்ணியமானது – திருப்தியான மற்றும் சுவை விருப்பமான பசி
வினா 6 : தோலின் அமைப்பு
A.இயல்பானது,வறண்டது,கடினமானது,மெலிதானது,குளிர்ச்சியானது.வறண்ட மற்றும் தோல் சுருக்க பிரச்சனைகள்
B.இயல்பானது,எண்ணெய் தோல்,மிருதுவானது,சிவந்த மற்றும் உணர்ச்சிமிக்கது.தோல் வீக்கப் பிரச்சனகள்
C.இயல்பானது,எண்ணெய் தோல்,கடினமானது,குளிர்ச்சியானது.அதிக எண்ணெய்,அரிப்பு மற்றும் பூஞ்சைத்தொற்று பிரச்சனைகள்
வினா 7 : முடி
A.கடினமானது,வறண்டது,அலையானது மற்றும் எளிதில் துண்டாகக் கூடியது.
B.இயல்பானது,நேரானது,மெலிதானது,பழுப்பு நிறமானது.
C.அடர்த்தியானது,சுருண்டது,எண்ணெய்ப் பசை நிறைந்தது.
வினா 8 : உதடு மற்றும் பல்
A.மெல்லிய உதடுகள்,வறண்டது.சீரற்ற பற்கள்.அடிக்கடி பற்கள் மீது கவனம் செலுத்தும் நிலை
B.நடுத்தர அளவுள்ள உதடுகள்,மேல் உதடானது கீழ் உதட்டைக் காட்டிலும் கருப்பாக இருத்தல்,நடுத்தர அளவிலான பற்கள் மற்றும் பல்சொத்தை பாதிப்பு
C.பெரிய மிருதுவான உதடுகள்.சீரான பற்களின் அமைப்பு.
வினா 9 : கண்கள்
A.அளவில் சிறியது,அடிக்கடி வறண்டு தூக்கத்தை உணருதல்.அதிகம் சிமிட்டுதல்.
B.நடுத்தர அளவிலானது.அடிக்கடி கண்கள் சிவந்து காணப்படுவது.
C.பெரியது மற்றும் ஈர்ப்புமிக்கது.அடர்ந்த கண் இமைகள் கொண்டது.
வினா 10 : பொதுவான அறிகுறிகள்
A.மூட்டுகளில் சப்தம்,சிறிய நெற்றி,எளிதில் நகம் உடைதல்
B.உடலில் மச்சம்,நடுத்தர அளவிலான நெற்றி,சிவந்த மற்றும் மிருதுவான நகங்கள்.
C.சமச்சீரற்ற உடல் அதவாது மிகப்பெரிய தொடை மற்றும் இடுப்பு.நீண்ட நெற்றி,அகன்ற மற்றும் வெள்ளை நிற நகங்கள்
வினா 11 : ஞாபகத் திறன்
A.விரைவாகக் கற்றுக்கொள்ளுதல் ஆனால் விரைவாக மறந்து விடுதல்.நல்ல குறுகிய கால நினைவுத்திறன்.
B.சராசரி வேகத்தில் கற்றுக்கொள்ளுதல் ஆனால் ஒரு முறை கற்றது எப்போதும் மறப்பதில்லை.
C.மெதுவாகக் கற்றுக்கொள்ளுதல் ஆனால் நீண்ட காலத்திற்கு நினைவில் வைத்தல்,நல்ல நீண்ட கால நினைவுத்திறன்
வினா 12 : மனம்
A.எளிதாக அமைதியற்ற நிலைக்குச் செல்லுதல்
B.எளிதில் பொறுமையற்ற மற்றும் ஆக்ரோஷமான நிலைக்குச் செல்லுதல்
C.எப்போதும் அமைதியாக மற்றும் கலக்க முறாமல் இருத்தல்
வினா 13 : மனச்செயல்
A.அதிக சிந்தனை
B.விரைவான செயல்பாடு
C.சோம்பேறியான செயல்பாடு,செயலை ஒத்திவைக்கும் செயல்பாடு.
வினா 14 : தூக்கத்தின் தரம்
A.மிதமான மற்றும் அமைதியற்ற தூக்கம்,காலையில் எளிதில் எழுந்து விடுதல்.
B.நடுத்தர மற்றும் தொடர்ச்சியான தூக்கம்,எளிதில் மீண்டும் தூக்கத்திற்கு சென்றுவிடுதல்
C.ஆழ்ந்த மற்றும் வலிமையான தூக்கம்,காலையில் எளிதில் எழ முடியாத நிலை
வினா 15 : உணர்ச்சி இயல்பு
A.அதிக கவலை,அடிக்கடி பதட்டமாகவும் கவலையாகவும் உணருதல்
B.அடிக்கடி எரிச்சல்,கோபம் மற்றும் பொறுமையற்ற நிலை ஏற்படுதல்
C.அன்பான மற்றும் அக்கறையான தன்மை.எளிதில் கோபம் ஏற்படாத நிலை.
மேலுள்ள வினாக்களுக்கு A,B,C என்று விடையளித்தப்பின் அதன் எண்ணிக்கையைக் கணக்கிடவும்.
இதில் விடை A என்பது வாத தோஷத்தையும்,B என்பது பித்த தோஷத்தையும்,C என்பது கப தோஷத்தையும்
குறிக்கிறது. நீங்கள் அளித்த விடைகளில் A,B மற்றும் C இல் எது அதிக எண்ணிக்கையில் உள்ளதோ அதுவே
உங்கள் உடலின் முதல்நிலை தோஷமாகும்.
இரண்டாவது அதிக எண்ணிக்கையில் உள்ளது துணைநிலை தோஷமாகும்.
எடுத்துக்காட்டாக,
A இன் எண்ணிக்கை – 8 மற்றும் B இன் எண்ணிக்கை 5 என இருக்கும் பட்சத்தில் உங்கள் உடலின் வகை வாதபித்த தோஷத்தைக் கொண்டதாகும்.
ஆயுர்வேத நூலான சரக் சம்ஹிதாவின் படி உடலானது ஏழு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது.
1.வாதம் (A அதிக எண்ணிக்கை)
2.பித்தம் (B அதிக எண்ணிக்கை)
3.கபம் (C அதிக எண்ணிக்கை)
4.வாதபித்தம் (A,B அதிக எண்ணிக்கை)
5.பித்தகபம் (B,C அதிக எண்ணிக்கை)
6.வாதகபம் (A,C அதிக எண்ணிக்கை)
7.வாதபித்தகபம் (A,B,C சம எண்ணிக்கை)
பொதுவாக மூன்று தோஷங்களும் சமநிலையில் இருப்பதே மனித உடலுக்கு உகந்ததாகும். வாதம், நம் உடலின் இயக்கத்தை, தசை, மூட்டுக்கள், எலும்பு இவற்றின் பணியை, சீரான சுவாசத்தை, சரியாக மலம் கழிப்பதை எல்லாம் பார்த்துக்கொள்ளும்.
பித்தம், தன் வெப்பத்தால் உடலைக் காப்பது, ரத்த ஓட்டம், மன ஓட்டம், செரிமான சுரப்பிகள், நாளமில்லாச் சுரப்பிகள் போன்ற அனைத்தையும் இயக்கும் வேலையைப் பார்க்கும்.
கபம், உடலெங்கும் தேவையான இடத்தில் நீர்த்துவத்தையும் நெய்ப்புத்தன்மையையும் கொடுத்து, எல்லாப் பணிகளையும் தடையின்றிச் செய்ய உதவியாக இருக்கும்.
வாதம், பித்தம், கபம் சீராக இருக்க என்ன செய்யலாம்?
இவை மூன்றும் உங்கள் உடலில் சரியான அளவில் இயங்க நீங்கள் உணவியல் முறையையும் வாழ்வியல் முறையையும்மாற்றியமைக்க வேண்டும்.
எண்ணெயில் பொறித்த உணவை தினமும் எடுத்துக் கொள்வதை முழுவதும் தவிர்க்க வேண்டும்.
தினமும் ஒரு பழம் சாப்பிடுவதைபழக்கப்படுத்திக் கொள்ளுங்கள், வேகவைத்த உணவு, நீராவியில் வெந்த
உணவு வகைகளை தினமும் எடுத்துக்கொள்ளுங்கள்.
சிறுதானிய வகை உணவுகள்,கொட்டை உணவுகள், பருப்புவகைகள் போன்ற உணவுகளைஅன்றாட உணவில்
தேவையானஅளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
உங்களுடைய சரியான தூக்கமும் வாதம் பித்தம் கபத்தை சீராக வைத்துக்கொள்ள உதவும். அதனால் உங்களின்
தூக்கத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுங்கள்.
அதிகபட்சம் 8மணி நேரம் தூங்கி அதிகாலை எழும் பழக்கத்தை கடைப்பிடியுங்கள்.
அதிகாலை எழுவது வாதம் பித்தம் கபத்தை சீராக்க உதவும்.
உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள்.யோகா, மூச்சுப்பயிற்சி போன்றவையும் மேற்கொள்ளுங்கள்.
அடிக்கடி கொஞ்ச கொஞ்சமாக தண்ணீர் குடியுங்கள்.மது, புகை பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடுங்கள்.
கேரட், பீட்ருட், இஞ்சி, பூண்டு, மணத்தக்காளி கீரை, மாதுளம்பழம், வில்வம்பழம், ஆப்பிள் போன்றவற்றை
அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளும்போது உங்களுடைய வாதம், பித்தம்,கபத்தை சீராக வைத்துக் கொள்ளமுடியும்.
முறையான உணவுப் பழக்கவழக்கங்களோடு மனமும் தூய்மையாக இருக்க வேண்டும்,
அதுவே நீடித்த ஆயுள் உண்டாக்கும் என்பதில் எந்தசந்தேகமும் இல்லை.
You must be logged in to post a comment.